🍑அதிக நேரம் டிவி பார்க்கும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம்: ஆய்வில் தகவல்,
🌹மாறிவரும் உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் முறை ஆகிய காரணங்களால் நம்மிடையே பரவலாகக் காணப்படும் நோயாக புற்றுநோய் உருவாகியுள்ளது.
🌹ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடித்து புற்றுநோயிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள வேண்டிய நிலைமையில்தான் நாம் உள்ளோம்.
🌹சமீபத்தில் பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில், ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என தெரியவந்துள்ளது.
🌹இந்த ஆராய்ச்சிக்காக, 5 லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
🌹 6 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், சுமார் 2,391 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது.
🌹அவர்களில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி அதிகமாக பார்க்கும் ஆண்களே அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌹தொலைக்காட்சி முன்பு அதிக நேரம் செலவழிக்காத ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு எனவும் இதில் தெரியவந்துள்ளது.
🌹அதேசமயம், தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்களுக்கும் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌹“அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும்போது ஆண்களிடையே அதிகமாக மது அருந்துதல், புகை பிடித்தல், உள்ளிட்ட பழக்கங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், திண்பண்டங்களை அதிகமாக உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கிறது.
🌹இதனால், உடலில் தேவையில்லாத கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுகிறது” என ஆராய்ச்சியாளர் நீல் முர்ஃபி தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment